அய்யலுாரில் 3 பாலங்கள்

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக அய்யலுார் பேரூராட்சி பகுதியில் 3 இடங்களில் ரூ.3.54 கோடிக்கு ஆற்று பாலங்கள் கட்டப்பட உள்ளன.

புத்துார் முடிமலை பகுதியில் இருந்து உருவாகி வரும் வறட்டாற்றால் மண்டபத்தோட்டம் வடக்கு களம், கொன்னையம்பட்டி பகுதி கிராமங்கள் மழை நேரத்தில் துண்டிக்கப்படுகின்றன. இதே போல் வறட்டாறும், ஏ.கோம்பை ஆறும் சேரும் கெங்கையூர் தடுப்பணை தரைப்பாலம் தாழ்வாக உள்ளதால் ஒவ்வொரு வெள்ளத்திலும் பாதிப்படைகிறது. இதனால் வரட்டாறு நீர் வாய்க்கால் மூலம் தும்மனிக்குளத்திற்கு செல்ல முடியாத உள்ளது.

இப்பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாக கொன்னையம்பட்டி, மண்டபதோட்டம் அருகில் தலா ரூ.ஒரு கோடியில் இரு பாலங்கள், கெங்கையூர் தடுப்பணை பகுதியில் ரூ.1.54 கோடியிலும் பாலங்கள் கட்ட பேரூராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Advertisement