அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் முனிஸ் பிரபு முன்னிலை வகித்தார்.
பெரம்பலுாரில் அம்மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுக்க சென்ற போது மனுவை கசக்கி வீசியும்.
அரசு அலுவலர் சங்க நிர்வாகிகளை வெளியே போ என பேசியதோடு, போலீசாரை ஏவியது, கைது செய்து காவல்துறை வாகனத்திலேயே நீண்ட நேரம் அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட செயல்களை கண்டித்து கோஷமிட்டனர்.
தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் நல விடுதி காப்பாளர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம், மின்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நஜ்முதீன் நன்றி கூறினார்.
மேலும்
-
'மாதம் 50,000 பேருக்கு பட்டா மீண்டும் முதியோர் ஓய்வூதியம்'
-
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கலாய்த்த துரைமுருகன்
-
மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்