கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போத்சவ திருவிழா, வேகவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாயார் குளம் என அழைக்கப்படும் காயாரோகணீஸ்வரர் தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி 19ம் ஆண்டு தெப்போத்சவம் இன்று துவங்குகிறது.
விழாவையொட்டி தினமும், காலை 10:00 மணிக்கு கச்சபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தாயார் குளத்தில் தெப்போத்சவம் நடக்கிறது.
இதில், மலர் அலங்காரத்தில், சுந்தராம்பிகையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் குளத்தில் மூன்று முறை உலா வருகிறார். இரண்டாம் நாளான நாளை 5 முறையும், நிறைவு நாளான நாளை மறுநாள் 7 முறையும் தெப்பத்தில் உலா வருகிறார்.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், தெப்போத்சவ திருவிழா குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement