பரமக்குடியில் கைதி உயிரிழப்பு: போலீசார் மீதான வழக்கு ஏப்.8க்கு தள்ளிவைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழப்பில் போலீசார் மீதான வழக்கு விசாரணையை ஏப்.,8 க்கு தள்ளி வைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு2012-ம் அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார்.
இந்த வழக்கில் ஏட்டுகள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ஆஜராகினர். கோதண்டம் ஆஜராகவில்லை. சாட்சிகள் விரசாரணைக்காக நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கு விசாரணையை ஏப்.,8க்கு தள்ளி வைத்தார்.
மேலும்
-
'மாதம் 50,000 பேருக்கு பட்டா மீண்டும் முதியோர் ஓய்வூதியம்'
-
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கலாய்த்த துரைமுருகன்
-
மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்