கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்

ராமநாதபுரம்: -உச்சிப்புளியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உச்சிப்புளி போலீசில் ஒரு மாதத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகாச்சி தேவர் நகரை சேர்ந்த மாரிசாமி மகன் காளீஸ்வரன் 21, பெருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் பவின் 20, ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோனிடம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இருவரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement