வழி விடுமுருகன் கோயிலில்பங்குனி உத்திரவிழா துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று (ஏப்.,2ல்) துவங்கியது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகேயுள்ள வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா நேற்று துவங்கி ஏப்., 12 வரை நடக்கிறது. நேற்று காலை வள்ளி, தெய்வானை, முருகனுக்கு அபிேஷகம் செய்து, தீபாராதனையுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்புக்கட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் இரவு சண்முகர் அர்ச்சனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியாக ஏப்,11ல் பங்குனி உத்திரம் அன்று காலை பிரம்மபுரீஸ்வரர் கோயில் நொச்சிவயல் ஊருணியில் இருந்து பால்குடம், பால்காவடிகளுடன் ஊர்வலமாக சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது.

இரவு பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது. மறுநாள் ஏப்.,12ல் சுவாமி வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement