ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ரோட்டில் மாடுகள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இந்நிலையில் ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றி திரிகின்றன.
வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
-
'சிதம்பரம் தனியார் மருத்துவ கல்லுாரியை அரசுடைமையாக்கியது தேவையற்ற செயல்' அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
-
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிலைக்குழு அமைக்க முடிவு வார்டு குழு கூட்டத்தில் தீர்மானம்
-
இன்று இனிதாக...( 04.04.2025) காஞ்சிபுரம்
-
லேடி வெலிங்டன் பள்ளியில் ரூ.3.65 கோடியில் ஆய்வகம்
-
திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்