குளிர்பானங்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: கோடை வெயில் தாக்கத்தால் மாவட்டத்தில் குளிர்பான விற்பனை அதிகரித்துள்ள நிலையில் சிலர் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக புகார் கிடைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை முதியவர்களும், நோயாளிகளும் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் வெளியில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மற்ற பகுதிகளை விட அதிகளவில் வெப்பம் உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க இளநீர், சர்பத், ப்ரூட் மிக்ஸர், மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை அதிகளவில் பருகுகின்றனர்.
கோடை வெப்பநிலை அதிகரிப்பால் முக்கிய ரோடு சந்திப்புகள், மக்கள் கூடும் பகுதிகளில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளும் முளைத்து வருகின்றன.
சில பகுதிகளில் பழச் சாறுகளில் அதிக செயற்கை நிறமூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வகை குளிர்பானங்களை பருகுபவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குளிப்பான கடைகளை ஆய்வு செய்து செயற்கை நிறமூட்டிகளை குளிர் பானங்களில் அதிகம் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும்
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
-
'சிதம்பரம் தனியார் மருத்துவ கல்லுாரியை அரசுடைமையாக்கியது தேவையற்ற செயல்' அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
-
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிலைக்குழு அமைக்க முடிவு வார்டு குழு கூட்டத்தில் தீர்மானம்
-
இன்று இனிதாக...( 04.04.2025) காஞ்சிபுரம்
-
லேடி வெலிங்டன் பள்ளியில் ரூ.3.65 கோடியில் ஆய்வகம்
-
திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்