பழுது கண்டறியும் கருவி மாணவிக்கு பாராட்டு

காரைக்குடி: காரைக்குடி கிட் அண்ட் கிம் இன்ஜி., கல்லூரி மாணவி மின்சார விநியோகத்தின் போது ஏற்படும் பழுதுகளை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து பாராட்டு பெற்றுள்ளார்.

கோயம்புத்துாரில், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பெண்கள் 2025 என்ற தலைப்பில் தமிழ்நாடு சிறப்பு மையத்தின் சார்பில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லூரிகள் கலந்து கொண்டன. கிட் அண்ட் கிம் கல்லூரி பேராசிரியர் ஷீபா பனிமலர் தலைமையில் மின்சாரவியில் துறை மாணவி மாணிக்கவள்ளி மின்சார விநியோகத்தில் பழுதுகளை கண்டறியும் கருவியை சமர்ப்பித்தார்.

இவரது கண்டுபிடிப்பு 4 வது இடம் பிடித்ததுடன் ரூ.10 ஆயிரம் பரிசு பெற்றார். மாணவியை கல்லூரி தலைவர் ஐயப்பன், கல்லூரி இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் மயில்வாகனன், துறைத் தலைவர் புஷ்பா, துணை முதல்வர் கற்பக மூர்த்தி, டீன் பார்த்தசாரதி ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் பாராட்டினர்.

Advertisement