லாடனேந்தல் கோயிலில் பங்குனி திருவிழா

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவன முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 6ம் தேதி பால்குட ஊர்வலம் நடைபெற உள்ளது.

லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 5ம் தேதி கோயில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் 101 தீ சட்டி எடுத்து, அலகில் வேல்பாய்ச்சி கோயிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தலும் , 6ம் தேதி பால்குட ஊர்வலமும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

Advertisement