ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை: 102 மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் ஏப்.5 ஆம் தேதி சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

சுகாதார ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி.,நர்சிங் ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் உயரம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டு மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்ச ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரத்து 820 வழங்கப்படும்.

எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன், மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎன்எம்., ஏஎன்எம்., டிஎம்எல்டி., பிளஸ் 2க்கு பிறகு இரண்டு ஆண்டு படித்திருக்க வேண்டும். அல்லது வாழ்க்கை அறிவியல், பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியல், நுண்ணுயிரியல், உயிர்த்தொழில்நுட்பம் இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.16 ஆயிரத்து 20 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு 044 - 28888060 / 89259 - 41977 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement