நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
மருதமலை கும்பாபிேஷகத்துக்காக, இன்று (ஏப்.,3) மதியம் 2:00 மணி முதல் வரும் 6ம் தேதி இரவு 9:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவிலுக்கு வரும் வாகனங்கள், வடவள்ளி, தொண்டாமுத்துார் சந்திப்பு வழியாக சின்மயா வித்யாலயா பள்ளியை கடந்து, அஜ்ஜனுார் பிரிவில் வலது புறம் திரும்பி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி செல்ல வேண்டும். வாகனங்கள் பாரதியார் பல்கலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மலைமேல் செல்ல அனுமதியில்லை.
இதேபோல், கோவிலுக்கு சென்று திரும்பி வருவோர், பாரதியார் பல்கலையில் இருந்து மருதமலை ரோடு, கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர் பிரிவு, வடவள்ளி ரவுண்டானாவிலிருந்து இடதுபுறம் திரும்பி, இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவும், வடவள்ளி தொண்டாமுத்துார் சந்திப்பு வந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வழியாகவும், மாநகருக்குள் செல்ல வேண்டும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
'மாதம் 50,000 பேருக்கு பட்டா மீண்டும் முதியோர் ஓய்வூதியம்'
-
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கலாய்த்த துரைமுருகன்
-
மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்