விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது. விவசாயிகள் ஒவ்வொருவராக தங்களது கோரிக்கைகளையும், குறைகளையும் கூறினர்.
மதுக்கரை குமிட்டிபதி பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும், சிறுத்தையை பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், கூண்டுவைத்து பிடிக்கவும், கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி பேசுகையில், ''சிறுத்தை பிரச்னை குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக்கூட்டத்தில், கோரிக்கை வைத்தோம். அப்போது எந்த அதிகாரிகளும் வரவில்லை. வராத அதிகாரிகளுக்கு, 'மெமோ' கொடுக்க வலியுறுத்தினோம். அவர் மெமோ கொடுத்தாரா இல்லையா என்பதை தெரிவிக்கவே இல்லை,'' என்றார்.
அப்போது கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார், ''கூட்டத்துக்கு வராத அதிகாரிகளுக்கு மெமோ கொடுத்திருக்கிறேன்,'' என்றார்.
மெமோ சென்றடைந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய கலெக்டர், இனி ஒவ்வொரு அதிகாரியும், தவறாமல் குறைதீர் கூட்டத்துக்கு வர வேண்டும்; தவறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நடவடிக்கையை, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறை தீர் கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்தார்த், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, விவசாயிகளுக்கு உதவியாக விவசாய கருவிகள் கண்காட்சியாக கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்படும். ஆனால் நேற்று கண்காட்சியோடு, விற்பனையும் நடந்தது. சுல்தான்பேட்டை ஒன்றிய உதவி வேளாண் அலுவலர் லதா, தேங்காய், தக்காளி, சிறுதானியங்கள், கீரை உள்ளிட்டவற்றை கண்காட்சியில் விற்பனை செய்தார். அரசுப்பணியாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மேலும்
-
'மாதம் 50,000 பேருக்கு பட்டா மீண்டும் முதியோர் ஓய்வூதியம்'
-
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கலாய்த்த துரைமுருகன்
-
மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்