கட்டிக்குளம் கோயில் பங்குனி விழா துவக்கம்

மானாமதுரை: கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, அழகிய நாயகி அம்மன் கோயில் பங்குனி உற்சவம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அழகிய நாயகி அம்மன் சிம்ம வாகனத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமி கோவிலிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கருப்பனேந்தல் மடத்தின் சார்பில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

வருகிற 11ம் தேதி தேரோட்டமும்,12ம் தேதி ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்தனேந்தலில் உள்ள வைகை ஆற்றிற்கு சென்று நீராடி பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.13 ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement