குன்றக்குடியில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏப்.1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் இரவு 8:00மணிக்கு சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 6ம் தேதி மாலை திருக்கல்யாணம், பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏப். 9ம் தேதி தெப்பத் திருவிழா, ஏப்.10 ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப். 11 காலை தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Advertisement