திருச்சுழி திருமேனிநாதர் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்

திருச்சுழி; திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக யாகசாலை, வேள்வி பூஜைகள் நடந்தன. கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, கொடி ஏற்றப்பட்டது.

நேற்று முதல் 10 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும். சுவாமி அம்மன் வெள்ளி, ரிஷபம், மயில், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

ஏப்ரல் 9ம் தேதி திருக்கல்யாணம், 10ம், தேதி தேரோட்டமும் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement