போலீஸ் செய்தி
கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: இருக்கன்குடியைச் சேர்ந்தவர்ராம்குமார், 24.நென்மேனி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்பனை செய்தார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். பிளாஸ்டிக் கவரில் அவர் 70 கிராம் கஞ்சா வைத்திருந்தார். கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி மீது போக்சோ வழக்கு
சாத்துார்: வெம்பக்கோட்டை கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் கூலித் தொழிலாளி ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தருவதாக சைல்டு லைன் 1098 எண்ணுக்கு புகார் வந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி நேரில் சென்று விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார், 48.ஆறு வயது சிறுமியிடம் அலைபேசியில் படம் காட்டுவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது. சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி மோதி இளம் பெண் பலி
காரியாபட்டி: காரியாபட்டி சின்ன கல்லுப்பட்டி சேர்ந்த ஜெயராம் மனைவி மகேஸ்வரி 32. கல்லுப்பட்டி, புல்லூர், பிச்சம்பட்டி, கம்பிக்குடி, மீனாட்சிபுரம் பள்ளிகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தற்காலிகமாக பணி புரிந்து வந்தார். நேற்று கம்பிக்குடி பள்ளிக்குச் சென்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் கல்லுப்பட்டி விலக்கு அருகே திரும்பியபோது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலே பலியானார்.
ரோடு வேலை நடைபெற்று வருவதால் ஒரு வழி பாதையாக வாகனங்கள் சென்று வருகின்றன. முறையான வழிகாட்டுதல் இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஏ .எஸ் .பி., மதிவாணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின் அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்து வாலிபர் பலி ஒருவர் காயம்
சாத்துார்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்,29. அதே பகுதியை சேர்ந்தவர் பயாஸ், 26. இருவரும் ஏப்ரல் 1 ரம்ஜான் பண்டிகையை கொடைக்கானலில் கொண்டாட முடிவு செய்து டூவீலரில் வந்தனர். அஷ்ரப் டூவீலர் ஓட்ட பயாஸ் பின்னால் உட்கார்ந்திருந்தார்.
அதிகாலை 4:15 மணிக்கு கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழிச்சாலையில் நள்ளி விலக்கு அருகே டூ வீலர் வந்த போது கவனக்குறைவால் நள்ளி விலக்கு சிற்றாறு பாலத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஷ்ரப் பலியானார். பயாஸ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
280 கிராம் கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
ராஜபாளையம்: மலையடிப்பட்டி சவுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த பிரவீன் குமார் 29, பொறியியல் பட்டதாரி. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அடுத்த தனியார் பள்ளி அருகே நின்றிருந்தவரை பிடித்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனர். விசாரணையில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.
* செண்பகத் தோப்பு ரோடு அரசு பள்ளி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த சாலமன் என்ற தெலுக்கன் சந்தேகத்திற்குஇடமான வகையில் நின்றிருந்தவரை சோதனை செய்ததில் 30 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும்
-
பி.பி.எப்., நாமினி புதுப்பித்தல்: இனி கட்டணமில்லை
-
போன் பறித்த இருவர் கைது
-
பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்
-
காவல் நிலைய பராமரிப்பு தொகையை திரும்ப பெற்றதால் போலீசார் புலம்பல்
-
பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
-
இ.பி.எம்., பாப்ஸ்ட் ரூ.340 கோடி முதலீடு