ம.தி.மு.க., சார்பில் நல உதவி

திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், முதன்மை செயலாளர் துரை வைகோ பிறந்தநாள் விழா, அருள்புரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொருளாளர் ரவி தலைமை வகித்தார். கொடியேற்று விழாவை தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. சாலை விபத்தில் கால்களை இழந்த, அருள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

Advertisement