பாம்பன் புதிய ரயில் பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் பேட்டி

4

சென்னை: "பாம்பன் ரயில் புதிய பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்" என்ன சென்னை விமான நிலையத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


ராமேஸ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் திறக்கவுள்ளார். பிரதமர் மோடி இலங்கையில் இருந்து நேரடியாக ராமேஸ்வரம் வருகிறார். அதற்கு முன்னதாக, விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று சென்னை வந்தார்.

அவரை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் சென்னையில் வாழும் ராஜஸ்தானைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்,
விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தமிழ் பாரம்பரிய கட்டடக்கலையின் அதிசயமாக பாம்பன் ரயில்வே பாலம் விளங்கும்.


பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டினார். பாம்பன் ரயில் புதிய பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்.பாம்பன் புதிய ரயில் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம். சிறப்பான பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement