தக்காளி விலை மீண்டும் சரிவு

கார்த்திகைப் பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அபரிமித விளைச்சல், தேவைக்கு அதிகமான உற்பத்தி காரணமாக தக்காளி விலை சரிந்தது.

கடந்த வாரம், 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 130 ரூபாய் வரை விற்றது. ரம்ஜான் பண்டிகை காரணமாக வெளியூர் தக்காளி வரத்து குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்து ஒரு பெட்டி, 200 ரூபாய் வரை விலை போனது. நேற்று ஒரு பெட்டி, 130 ரூபாய்க்கு விற்றது. தக்காளி விலை நிச்சயமற்ற நிலையில் இருப்பதாலும், உற்பத்திச் செலவை விட குறைவாக இருப்பதாலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Advertisement