ஏப்ரலில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

7

தமிழ் வருட பிறப்பு, புனித வெள்ளி, 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகள் உட்பட ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.


ஏப்., 1ல் ஆண்டு கணக்கு நிறைவு பணி என்பதால், அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


தொடர்ந்து, ஏப்., 10ல் மகாவீர் ஜெயந்தி, ஏப்., 14ல் தமிழ் வருட பிறப்பு, ஏப்., 18ல் புனித வெள்ளி, ஏப்., 12ல் இரண்டாவது சனி, ஏப்., 26ல் நான்காவது சனி ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


இவை தவிர ஞாயிறுதோறும் விடுமுறை நாட்களாக இருப்பதால், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படும்.

- நமது நிருபர் -

Advertisement