ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

திருவாரூர்:சக ஊழியர் சம்பள நிலுவையை பெற்றுத்தர, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ் வரர் கோவில் செயல் அலுவலர் ஜோதி, 42. இவர், மன்னார்குடி, ஆனந்த விநாயகர் கோவில் பொறுப்பு செயல் அலுவலராக உள்ளார்.
திருக்கொள்ளிக்காடு கோவில் எழுத்தர் சசிகுமார், 49. இவருக்கு சம்பள நிலுவைத்தொகை, 2 லட்சம் ரூபாய் வர வேண்டியிருந்தது. இந்த தொகையை பெற்றுத்தர, சசிகுமாரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக ஜோதி கேட்டுள்ளார். இதற்கு, அவர் சம்மதித்துள்ளார்.
அரசுக்கு கோப்புகளை அனுப்பி, 2 லட்சம் ரூபாயை சசிகுமார் பெற்றுள்ளார். பணம் வந்தவுடன், 1 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை ஜோதி கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சசிகுமார், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று ரசாயன பவுடர் தடவிய, 1 லட்சம் ரூபாயை, மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோவிலில் ஜோதி பெற்ற போது, டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
மேலும்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு