பழவேற்காடில் மின்விளக்கு பழுது சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை

பழவேற்காடு::பழவேற்காடு பஜார் பகுதியில் கடந்த, 10ஆண்டுகளுக்கு முன், அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளன.

இதனால், இரவு நேரங்களில் பஜார் பகுதி இருண்டு உள்ளது. பழவேற்காடு மீனவப்பகுதியில், 35 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் வியாபார மையமாக, பழவேற்காடு பஜார் பகுதி அமைந்து உள்ளது.

பெரும்பாலும், மீனவர்கள் தொழிலுக்கு சென்று, மாலையில் வீடு திரும்புவர். அதன்பின், வீட்டு தேவைக்கான பொருட்களை வாங்க மாலை மற்றும் இரவு நேரத்தில் தான் பழவேற்காடு பஜார் பகுதிக்கு வருகின்றனர்.

பெண்கள், பஜார் பகுதிக்கு வந்து செல்லும்போது அச்சத்திற்கு ஆளாகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து, இரண்டு ஆண்டுகளாகியும், அதை சரி செய்ய மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, மீனவ மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

உயர்கோபுர மின்விளக்கு பழுதால் பஜார் பகுதி இருண்டு கிடப்பது, மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement