பெருமாநல்லுார் குண்டம் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் 11ம் தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஈஸ்வரன் கோவில் வீதிக்கு ஊர்வலம் நடந்தது. அங்கு கிராம சாந்தி மேற்கொள்ளப்பட்டது.
கணபதி ஹோமம் மற்றும் கொண்டத்து காளியம்மனுக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார் .
அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், கோவில் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வரும் 8ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!