மகளிர் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை; கோவை மகளிர் வக்கீல் சங்கத்திற்கு, 2025-26 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தலைவராக தமிழ்செல்வி, துணை தலைவராக வனிதா, செயலாளராக ரேணுகாதேவி, இணை செயலாளராக விசாலாட்சி, பொருளாளராக ஆனந்தி, செயற்குழு உறுப்பினர்களாக லலிதா, ஞானமணி, உமா, சித்ரா, சோபனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை வக்கீல் சங்கத்திற்கு, இணை செயலாளராக ரோகிணி, செயற்குழு உறுப்பினர்களாக ராஜராஜேஸ்வரி, ஜானகி ஆகியோரும், குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்கத்திற்கு, இணை செயலாளராக கோகிலவாணி, செயற்குழு உறுப்பினராக சோபியா ஆகியோர், மகளிர் வக்கீல் சங்கத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement