போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை; போட்டா ஜியோ (அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு) சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், சரண்விடுப்பு ஒப்படைப்பினை நடப்பாண்டு ஏப்., 1 முதல் அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதிய குழு நிர்ணயம் செய்த போது, 21 மாத நிலுவை தொகையினை வழங்குதல், சத்துணவு அங்கன்வாடி பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலிபணியாளர்கள், பகுதி நேர பணியாளர்கள் எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கோரிக்கை விளக்கப்பேருரை நிகழ்த்தினார். திரளான அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!