புல்லுக்காடு பகுதியில் தீ விபத்து

கோவை; உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகில், சூயஸ் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள் கால்வாய் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சேமிப்பு கிடங்கு அருகில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பற்றியது. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காய்ந்த செடிகள் இருந்ததால், தீ மளமளவென சோலார் பிளான்ட் மற்றும் மாநகராட்சி குப்பை மாற்று மையம் பகுதிக்கு பரவியது. இதனால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது.
இதைப்பார்த்த பொது மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனம், கோவைப்புதுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனம் என இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.
தீயணைப்புத்துறை கோவை மாவட்ட அலுவலர் புளுகாண்டி தலைமையில், மாவட்ட துணை அலுவலர்கள் அழகர்சாமி, ராமசந்திரன் உள்ளிட்ட 22 பேர் போராடி தீயை அணைத்தனர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!