காங்., சிறுபான்மை அணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை; மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்., கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காங்., சிறுபான்மை அணி மாநில தலைவர் முகமது ஆரீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியலமைப்பு கொடுத்துள்ள அனைத்து மக்களுக்குமான உரிமைகள் இதில் மீறப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீதிமன்றத்தை அணுகுவோம். ஒரு போதும் இச்சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம். இது வேடிக்கையான ஒன்று. வக்ப் தானம் கொடுப்பதற்கு ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு இஸ்லாமியர் யார் என்பதை கூறுவதற்கு யாரிடம் சான்றிதழ் பெற முடியும். இது ஒரு மோசமான சட்டமாக கருதுகிறோம்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement