வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்

கோவை; துடியலுார் பகுதியில் வாகனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
துடியலுார், உருமாண்டம்பாளையம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரம்யா, 43; சுய தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை சாஸ்திரி நகரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர் அந்த மண் ரோட்டில் வாகனத்தில் வந்தார்.
அப்போது, அங்கு சிலிண் டர் வினியோகம் செய்யும் ஆட்டோ நின்றுள்ளது. இரண்டு வாகனங்கள் செல்ல இடமில்லாமல் இருந்ததால், கல்லுாரி மாணவர் உதவிக்கு ரம்யாவை அழைத்துள்ளார்.
அப்போது, மண் ரோட்டில் உள்ள வீட்டு உரிமையாளர் செங்காளியப்பன் அங்கு வந்து தனது வீட்டில் 'சிலாப்' மீது வாகனத்தை ஏற்றி செல்லக்கூடாது என கூறி ரம்யாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த, செங்காளியப்பனின் மகன் ராஜேஷ் கையில் இரும்பு கம்பியை எடுத்து ரம்யாவை தாக்க வந்தார்.
அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி ரம்யாவை அங்கிருந்து அனுப்பினர். ரம்யா அங்கிருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது, செங்காளியப்பனின் நண்பரான சுந்தர்ராஜன் அங்கு வந்தார். வந்த வேகத்தில் ரம்யாவை எட்டி உதைத்து, கையை பிடித்து முறுக்கி தாக்கினார். ரம்யா கீழே விழுந்தவுடன் அருகில் இருந்து ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து தாக்க வந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தனர்.
சம்பவம் குறித்து ரம்யா கூறுகையில், '' செங்காளியப்பன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஆகியோர் எப்போதும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். யாராவது கேட்டால் ஆட்களை சேர்த்துக்கொண்டு வந்து தகராறு செய்கின்றனர். பெண்கள் இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
அலையவிடும் போலீசார்
சம்பவம் குறித்து ரம்யா புகார் அளிக்க துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கிருந்த போலீசார் 'இது பெண்கள் தொடர்பாக பிரச்னை. நீங்கள் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள்' என கூறி அனுப்பினர்.
இதையடுத்து, அவர் காந்திபுரம் வந்தால், 'இது போன்ற அடிதடி பிரச்னைகள் எல்லாம் துடியலுார் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும்' எனக்கூறி மீண்டும் துடியலுார் செல்லும் படி திருப்பி அனுப்பினர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் நியாயம் வேண்டி போலீசாரிடம் சென்றால், அவரின் மன நிலை குறித்து சற்றும் யோசிக்காமல் இவ்வாறு அலையவிடுகின்றனர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!