மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி: பார்லி., ஒப்புதல்

5

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே, இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், 2023ல் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது.


இங்கு, ஜனாதிபதி ஆட்சி சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு லோக்சபாவின் ஒப்புதல் பெறவேண்டும். இதன்படி, இதற்கான தீர்மானம் நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:



மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. மீண்டும் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement