ஊழல் முடிவுக்கு வரும்!

வக்பில் நடந்த ஊழல் முறைகேடுகள், நாட்டை கறையான் போல் தின்று கொண்டிருந்தன. வக்ப் திருத்த மசோதா, அவற்றை முடிவுக்கு கொண்டு வரும். எந்த ஒரு தனிநபரும், நிறுவனமும், மத அமைப்பும் சட்டத்திற்கு மேலான வர்கள் இல்லை. இதுவே இந்த மசோதாவின் அடிப்படை.

கங்கனா ரணாவத்

லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


ரத்து செய்வோம்!



பா.ஜ.,வின் ஒரே நோக்கம் நாட்டைப் பிரித்து ஆள்வது. அதற்காகவே வக்ப் மசோதாவை கொண்டு வந்துள்ளனர். மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் இந்த வக்ப் மசோதா ரத்து செய்யப்படும். வக்ப் குறித்து பேசுவதற்காக, என் கட்சி எம்.பி.,க்கள் டில்லியில் உள்ளனர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர்,

திரிணமுல் காங்.,


நமக்கு கிடைத்தது என்ன?



அமெரிக்காவுடனான நட்பை பராமரிக்க, மத்திய அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அமெரிக்க நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க, 'டிஜிட்டல் வரி'யை நீக்கினார். ஆனால், அதற்கு பதிலாக நமக்கு கிடைத்தது, 27 சதவீத இறக்குமதி வரி. இது, நம் நிறுவனங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகவ் சத்தா

ராஜ்யசபா எம்.பி., - ஆம் ஆத்மி

Advertisement