பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்

நெட்டப்பாக்கம்:சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் வரும் 6ம் தேதி நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் இக்கோவிலில் ராம நவமி உற்சவம் வரும் 6ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை பெருமாளுக்கு இளநீர், பால், தேன், சந்தனம் அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது.

காலை 9:௦௦ மணிக்கு பிரபந்த சேவை உற்சவமும், காலை 10:30 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 1 மணிக்கு சன்னதி புறப்பாடு நடக்கிறது.

Advertisement