கம்பெனியில் திருட்டு

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தனியார் டயர் தொழிற்சாலையில் வெல்டிங் மெஷின் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின், கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கம்பெனி செக்யூரிட்டி அதிகாரி புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement