மராத்தி பேச தெரியாத வங்கி அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த ராஜ் தாக்கரே கட்சியினர்

புனே: 'மராத்தி பேசத் தெரியாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்' என தன் கட்சியினருக்கு, எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே உத்தரவிட்ட சில நாட்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வங்கிகளின் மேலாளர்கள், அந்த கட்சியினரால் தாக்கப்பட்டனர்.
தடுமாற்றம்
மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எனும் எம்.என்.எஸ்., கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. சமீபத்தில் அவர், 'மராத்தி பேசத் தெரியாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்' என, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், புனே அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குள் நுழைந்த எம்.என்.எஸ்., கட்சியினர், அங்கிருந்த மேலாளரிடம், மராத்தியில் பேசும்படி கூறினர்; அவர் தடுமாறினார். அவரை காப்பாற்றும் நோக்கத்தில் வந்த மராத்தி மொழி அறிந்த ஊழியரை அடித்து, அறைக்குள் தள்ளி பூட்டினர். பின், அந்த வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்தனர்.
வலியுறுத்தல்
அதுபோல, மும்பை அருகே உள்ள அம்பர்நாத் என்ற நகரில் உள்ள பாங்க் ஆப் மஹாராஷ்டிரா கிளைக்குள் புகுந்த எம்.என்.எஸ்., கட்சியினர், அங்கிருந்த மேலாளர் அறைக்குள் புகுந்து, அவரை மராத்தி மொழியில் பேசும்படி கூறினர்.
அந்த அதிகாரி தடுமாறவே, அவரை கன்னத்தில் அறைந்த எம்.என்.எஸ்., கட்சியினர், மராத்தி மொழிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பின் கலைந்து சென்றனர். இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிலரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மாநிலத்தின் பல இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு செல்லும் எம்.என்.எஸ்., கட்சியினர், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், மராத்தி மொழியில் பேச வேண்டும் என வலியுறுத்தி, நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.












மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!