இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி டி.ஐி.பி.,யிடம் மாஜி முதல்வர் புகார்

புதுச்சேரி: புதுச்சேரி காங்., நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, டி.ஜி.பி., ஷாலினி சிங்கிடம் புகார் மனு அளித்தார்.

அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற காங்., நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, டி.ஜி.பி., ஷாலினி சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பெத்த பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், மாநில செயலாளர் தனுசு, இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், 'அரியாங்குப்பத்தில் காங்., நடத்திய போராட்டத்தை சபாநாயகர் திரித்து கூறியுள்ளார். கட்சி தொண்டர் தாக்கப்பட்டதற்காக போராட்டம் நடத்தினோம். குற்ற வாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை.

என்.ஆர்.காங்., பா.ஜ., தான் கொலை குற்றவாளிகள், நில அபகரிப்பாளர்கள், சிறை கைதிகள் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படுகிறது.

சபாநாயகருக்கு நாவடக்கம் தேவை. எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரியாமல் பேசியுள்ளார்.

காங்., தொண்டரை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. திசை திருப்பும் முயற்சிகளில் சபாநாயகர் ஈடுபட வேண்டாம்' என்றார்.

Advertisement