ஜிப்மர் இயக்குநருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ., நன்றி

புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி புற நோயாளிகளுக்காக தனி கவுண்டரை திறந்த ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேஹியை அசோக் பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை அண்மையில் சபாநாயகர் செல்வம், அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில நோயாளிகளுக்கு புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தனியாக 2 கவுண்ட்டர்களை திறக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, அமைச்சர் நட்டா உத்தரவின் பேரில், ஜிப்மரில் தனியாக புதுச்சேரி நோயாளிகளுக்கு இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது. இதேபோல், ஜிப்மரில் புதுச்சேரி முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த புற நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை புரிவதற்கு முதன்மை இணைப்பு அதிகாரியாக டாக்டர் பிரார்த்தனா நியமனம் செய்யப்பட்டார்.
கோரிக்கைகளை நிறைவேற்றிய ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேஹியை மத்திய சுகாதார அமைச்சர் நட்டா சார்பாக அசோக் பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!