'ஸ்ரீமத் ராமாயணம் வேண்டியதை கொடுக்கும் கல்பக விருட்சம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
புதுச்சேரி: இதிகாச புராணங்களை அறியாமல் வேத, வேதாந்தங்களின் பொருள் உணர முடியாது என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.
ராம நவமி உற்சவத்தையொட்டி, முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏப்., 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம்தினமும் மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை உபன்யாசம் செய்கிறார்.
முதல் நாளான நேற்று அவர், செய்த உபன்யாசம்:
நமது சனாதன மதத்திற்கும், கலாசாரத்திற்கும் தர்மத்தோடு கூடிய வாழ்க்கை முறைக்கும் ஆணிவேராக இருப்பது வேதங்கள். இதிகாச புராணங்களை அறியாமல் வேத, வேதாந்தங்களின் பொருள் உணரமுடியாது.
ஸ்ரீமத் ராமாயணம் வேண்டியதைக் கொடுக்கும் கல்பக விருட்சம். ராமரிடமிருந்து தான் தர்மம், அவருடைய குணங்களையும் தெரிந்து கொள்கிறோம்.
ராம என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம். வியாச மஹரிஷி யதார்த்த அக்னிபுராணம் என்னும் நூலில் அத்தியாயம் 348ல் சமஸ்கிருதத்தில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். 'ரா' என்ற எழுத்து நெருப்பு, முடிவு, இறப்பு, ஞானம், வலிமை மற்றும் இந்திரன் என்ற பல அர்த்தங்களைத் தரும். 'ம' என்ற எழுத்து மஹாலட்சுமி, வளமை, மற்றும் மாதா, தாய், பிறப்பு என்ற பொருளைத் தரும். இந்த வேர் சொற்கள் இணைந்து 'ராம' என்று வரும் போது, அது, பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுதலை தரும் தாரக மந்திரம் ஆகிறது.
ஸ்ரீ என்பது மாதா மஹாலட்சுமியைக் குறிக்கும். ஸ்ரீ ராம என்னும் போது. இங்கு சீதா மாதாவையும் ராமபிரானையும் குறிக்கும். ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற பதத்தில் 'ரா' என்பது முக்கியமான எழுத்து. அதை நீக்கி விட்டால் பொருள் வராது.
'ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தில் 'ம' என்பது முக்கியமான எழுத்து. அதை நீக்கி விட்டால் பொருள் மாறிவிடும். இந்த இரண்டு உயிரான அக் ஷரங்களும் சேர்ந்த சொல்லே 'ராம' என்பதால் இதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.
ஆகவே, ராம நாமமே தாரக மந்திரம். ராம நாமமே வாழ்வை உய்விக்கும் மந்திரம். ராம நாமத்தை ஜெவித்தும், சொல்லியும் நன்மை பெறுவோம்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!