போட்டோ ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் போட்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் அருள்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகர் வரவேற்றார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயராமு, பாண்டி முருகன், அருசு அலுவலக உதவியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், அரசு அலுவலக உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் குப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

Advertisement