வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்

திருவனந்தபுரம்: லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மற்றும் அவரது சகோதரி பிரியங்கா மவுனம் காத்ததற்கு கேரளாவில் முக்கிய முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் செயல்படும் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா என்ற அமைப்பின் மலையாள நாளிதழ் சுப்ரபாதம்.
இந்த இதழலில் இன்று( ஏப்.,04) வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: வயநாடு எம்.பி., பிரியங்கா, கட்சியின் கொறடா உத்தரவு இருந்த போதிலும் பார்லிமென்டிற்கு வரவில்லை. அது ஒரு களங்கமாகவே இருக்கும். முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை பா.ஜ., இடிக்கும் போது பிரியங்கா எங்கு இருந்தார்?
நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் மசோதா மீது எதிர்க்கட்சித் தலைவர் ஏன் பேசவில்லை என்ற கேள்வி தொடர்ந்து இருக்கும்.
இந்த சட்டத்திருத்தம் மிகுந்த ஆபத்தானது. இனிமேல் சட்ட ரீதியிலான போராட்டத்திற்கான நேரம். நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து முறையிடுவதே தற்போது உள்ள ஒரே வழி. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.
இம்மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்த நாளிதழ் பாராட்டு தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடியாக அவர்களின் பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் இந்த அமைப்புக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிகிறது. இச்சமூகத்தினர் பெரும்பாலானோர் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், காங்கிரசை விமர்சித்துஇந்த அமைப்பு செய்தி வெளியிட்டு உள்ளது அங்கு பேசு பொருளாகி உள்ளது.










மேலும்
-
அநாகரிகம், ஆபாசம், தரம் தாழ்ந்த பேச்சு
-
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.46 லட்சம் மோசடி: ஒருவர் கைது * ஒருவர் கைது; இன்னொருவருக்கு வலை
-
'அதிக எத்தனால் பிழிதிறன் கொண்ட மக்காச்சோள ரகம் தேவை' கோவையில் நடந்த பயிலரங்கில் வலியுறுத்தல்
-
துாங்கு ராசா; துாங்கு!
-
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யாவிடில்?
-
சேட்டைக்காரன் 'மிஸ்டர். சோட்டு'