சவுரப் சவுத்ரி ஏமாற்றம்: உலக துப்பாக்கி சுடுதலில்

பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி பங்கேற்றார்.


இரண்டு ஆண்டுகளுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய இவர், 577.14 புள்ளிகளுடன் 18வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான அமித் சர்மா (579.22 புள்ளி, 10வது இடம்), ஆகாஷ் பரத்வாஜ் (577.14, 19வது) ஏமாற்றினர்.
இந்தியாவின் ரவிந்தர் சிங் (580.22), வருண் தோமர் (580.17) முறையே 8, 9வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். அடுத்து நடந்த பைனலில் வருண் (179.9) 4வது, ரவிந்திர் (160.0) 6வது இடம் பிடித்து பதக்கம் வெல்ல தவறினர்.

Advertisement