அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை சம்பளம் வழங்குவது உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் விக்டோரியா தலைமை வகித்தார்.

மாவட்ட துணை தலைவர்கள் அழகம்மாள், உதயநிலா, ராஜாத்தி, சுமதி முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் சேசுமேரி, இணை செயலாளர்கள் தமிழரசி, மலர்கொடி, வனிதா பேசினர். மாநில துணை தலைவர் செல்வகுமார் துவக்க உரை ஆற்றினார்.

மாநில பொது செயலாளர் வாசுகி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் இக்னிஸ் ஜோஸ்பின்ராணி நன்றி கூறினார்.

Advertisement