இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு

மும்பை: இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் உள்ளார் சாய் சுதர்சன்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் 23. பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். முதல் 3 போட்டியில் 2 அரைசதம் உட்பட 186 ரன் (சராசரி 62.00) எடுத்துள்ளார்.
இவர் கூறியது:
குஜராத் அணி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேப்டன் சுப்மன் கில் என இருவரும், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றனர். எனது திட்டத்தில் தலையிடுவது இல்லை. அதேநேரம், எது சிறந்தது, சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும், எந்தெந்த இடத்தில் முன்னேற்றம் தேவை என 'அட்வைஸ்' செய்வர். ஒருவேளை தவறு செய்தாலும் பெரியதாக கண்டு கொள்வதில்லை.
பொதுவாக தேசத்திற்காக விளையாட வேண்டும் என்பது எல்லோரது கனவாக இருக்கும். இதை நிறைவேற்ற பிரிமியர் கிரிக்கெட் நல்ல தளமாக திகழ்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், தேசத்திற்காக பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு சாய் சுதர்சன் கூறினார்.
மேலும்
-
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ: குழந்தைகளை மீட்க போராடிய தாயின் துணிச்சல்
-
தீயில் சிக்கிய இந்திய சிறுவர்கள்; உயிர் காத்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு கவுரவம்
-
அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்; ஆளும்கட்சியினர் அதிர்ச்சி
-
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துள்ளார் பழனிசாமி: கனிமொழி
-
வக்ப் சட்டத்தை எதிர்த்து மே.வங்கத்தில் போராட்டம்: எம்.பி. அலுவலகம் சூறை. ரயில்கள் மீது கல்வீச்சு
-
பத்தாம் வகுப்பு தேர்வு கேள்வியில் குழப்பம்: மதிப்பெண் கிடைக்குமா?