மின்வாரிய குறைதீர் கூட்டம் ஏப்., 5 ல் நடைபெறும்

சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரை, திருப்புத்துார் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய குறைதீர் கூட்டம் ஏப். ௫ல் நடைபெறும் என சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இக்குறைதீர் கூட்டம் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். சிவகங்கை செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மதகுபட்டி, மலம்பட்டி பகுதி மின்நுகர்வோரும், மானாமதுரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சாலைகிராமம் மின் நுகர்வோரும், திருப்புத்துார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருப்புத்துார், சிங்கம்புணரி, ஆ.தெக்கூர், கீழச்சிவல்பட்டி மின்நுகர்வோரும் புகார் அளிக்கலாம். காரைக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காரைக்குடி, கண்டரமாணிக்கம், கல்லல், புதுவயல், தேவகோட்டை, கானாடுகாத்தான் பகுதி மின் நுகர்வோர் பங்கேற்று, மின் கட்டண தொகை, மின் மீட்டர் பிரச்னை, குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.

Advertisement