வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் கவலை
ப.வேலுார்: ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்-தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிரா-மங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன.
அவ்-வாறு பயிரிடப்படும் வாழை, ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்ப-டுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்துச்செல்வர்.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க-ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகி-றது. நேற்று, 600க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வரத்தாகின.
கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்-போது, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், 400 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி தார், 350 ரூபாயாக குறைந்துள்-ளது. ஐந்து ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு மொந்தன் வாழை, தற்போது, மூன்று ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதம-டைந்த வாழைத்தார்கள் அதிகளவில் விற்பனைக்கு வரத்தாகின. இதனால், விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்