சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு

கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகளை கோவை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்தனர்.
பெண் போலீஸார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை, சென்னை உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், அனைத்து வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கர் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார்.
இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது.
இந்த நிலையில், வெவ்வேறு ஸ்டேஷன்களில் பதியப்பட்ட வழக்குகள் மாற்றப்பட்டு, சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் புதிதாக 15 எப்.ஐ.ஆர்.,க்களை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அளிக்கவும், விசாரணைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும், சவுக்கு சங்கர் மீது முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் கோவைக்கு வந்துள்ளனர்.







மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்