ரேஷனில் கோதுமை நிறுத்தம் கார்டுதாரர்கள் தவிப்பு

திருப்புவனம்: ரேஷன் கடைகளில் கடந்த 2 மாதங்களாக கோதுமை வழங்கப்படாததால், கார்டுதாரர்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். இங்கு மானிய விலையில் பொருட்கள் வழங்குவதால், அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இங்கு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கோதுமை வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் கோதுமை கிடைக்காமல் தவிக்கின்றனர். கோதுமை இன்றி திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கார்டுதாரர்கள் கடைகளில் கிலோ ரூ.48க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள 79 ரேஷன் கடைகள் மூலம் 38 ஆயிரத்து 82 கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 10,095 கிலோ ஒதுக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 கிலோ வரை கோதுமை வழங்குகின்றனர். கடந்த 2 மாதமாக கோதுமை வழங்காததால், கார்டுதாரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement