நான்கு வழிச்சாலையில் தடுப்புகள் சேதம்

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் புதிதாக அமைத்த தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும், அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழி சாலை அமைத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியனில் சிக்னல் போர்டுகள் வைத்துள்ளனர். போதிய இடவசதி உள்ள இடங்களில் சென்டர் மீடியன்களில் அரளிச் செடிகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இடவசதி இல்லாத இடங்களில் சிமெண்ட் தளமாக அமைத்தும், 72 இடங்களில் சாலையை கடக்க வசதி செய்து தந்துள்ளனர்.
லாரி, டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சந்திப்புகளில் சாலைகளை கடக்காமல் பல இடங்களில் குறுக்கே கடக்கின்றன.
இதனால் விபத்துகள் அதிகரிப்பு, உயிரிழப்பு நேரிடுகிறது.
இதனை தவிர்க்க சென்டர் மீடியன்களில் சிக்னல் போர்டுகள் அமைத்தனர். பசுமை இந்தியாவை உருவாக்கும் பொருட்டு பச்சை நிறத்தில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புகள் ஒருசில நாட்களிலேயே சேதமடைந்து விட்டன.
வாகனங்களால் சேதமடையாமல் வெறும் காற்றிற்கே சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்டர் மீடியனில் சேதமடைந்துள்ள தடுப்புகளை சரி செய்து தரமான தடுப்புகளாக அமைக்க வேண்டும்.
மேலும்
-
இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு
-
கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை