திருப்புவனத்தில் தரமற்ற முறையில் கட்டிய எரிவாயு மின் மயானம் பொதுமக்கள் புகார்
திருப்புவனம்: திருப்புவனத்தில் ரூ.1.5 கோடியில் கட்டிய மின் எரிவாயு மயானம் திறக்கப்படும் முன்பே பழுதடைந்துவிட்டதால், மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்புவனத்தில் நெல்முடிகரை, புதூரில் மயானம் உள்ளது. இப்பேரூராட்சி மக்கள் தொகை 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில், மழை காலங்களில் உயிரிழந்தோரை எரியூட்ட, அடக்கம் செய்ய மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக நெல்முடிகரையில் ரூ.1.5 கோடியில் 2023ம் ஆண்டு மின் எரிவாயு தகன மேடை கட்டினர். விரைவில் இக்கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், மயான கட்டடம் கட்டி 2 ஆண்டிற்கு மேல் ஆகியும், திறக்கப்படாத நிலையில் மின்மயானத்திற்கான புதிய கட்டடம் சேதமடைந்துள்ளன. புகைபோக்கியின் நான்கு புறமும் இரும்பு கம்பிகள் மூலம் இழுத்து தரையில் இரும்பு கம்பி பொருத்தி அதில் கட்ட வேண்டும். ஆனால் கட்டட தூண்களிலேயே இரும்பு கம்பிகளை கட்டியுள்ளனர்.
கட்டடம் திறக்கப்படும் முன்னரே சேதமடைந்து விட்டதால், புதிதாக சேதமடைந்த பகுதியை அகற்றி கட்டாமல், லேசாக பூசி வருகின்றனர். ஏற்கனவே பெயின்ட் அடித்தநிலையில், மீண்டும் சிமின்ட் கட்டுமான பணி நடக்கிறது. இதனால், மீண்டும் பெயின்ட் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் கட்டியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை
-
சவுரப் சவுத்ரி ஏமாற்றம்: உலக துப்பாக்கி சுடுதலில்
-
இங்கிலாந்து வீரர் விலகல்