இங்கிலாந்து வீரர் விலகல்

லண்டன்: இங்கிலாந்து செல்லவுள்ள (ஜூன் 20-ஆக. 4) இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.


முதல் டெஸ்ட், ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. அடுத்த போட்டிகள் பர்மிங்ஹாம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூன் 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31 - ஆக. 4) நடக்கவுள்ளன.
இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ஸ்டோன் 31, முழங்கால் காயம் காரணமாக விலகினார். கடந்த மாதம் அபுதாபியில் நடந்த நாட்டிங்காம்ஷயர் அணிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற போது இவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு 'ஆப்பரேஷன்' செய்யவுள்ள இவர், குணமடைய 14 வாரம் தேவைப்படும் என்பதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

Advertisement