தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் எப்போது?

1

சென்னை : காங்கிரஸ் மாநாடு முடிந்த பின், தமிழக காங்., நிர்வாகிகள் பட்டியலை வெளியிட, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.


தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த, வரும் 8, 9 ஆகிய தேதிகளில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் தேசிய மாநாடு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. தமிழக காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், என, 100க்கும் மேற்பட்டோர் தேசிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


மாநாடு முடிவடைந்த பின், தமிழக அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்கள், தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் காலியாக உள்ள, 12 மாவட்ட தலைவர்களை நியமிக்க, கிரிஷ் சோடங்கர் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement